கூகுள் பஸ் -ல் விரைவில் அதிரடி மாற்றம் வரப்போகிறது.
Posted by
சுஜந்தன் at
|
Share this post:
|
0 Comments
கூகுள் பஸ் வெளிவந்த சில நாடகளுக்குள்ளே டிவிட்டர் மற்றும் பேஸ்புக்-ன் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்து அதிவேகமாக வளர்ந்து வருகிறது. கூகுள் பஸ் வேகமாக வளர்ந்து வருவதற்கு முக்கியகாரணம் ஜீமெயில் இண்டகிரேசன் தான் .ஜீமெயில் பயன்பன்படுத்தும் யாரும் கூகுள் பஸ் எளிதாக தன் மெயிலுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இப்படி இருக்க கூகுள் பஸ்-ல் விரைவில் சில அதிரடி மாற்றம் வரப்போகிறது அதைப்பற்றிய ஒரு சிறப்பு பதிவு.
கூகுள் என்றால் தினமும் ஒரு மாற்றம் என்று தன் பயனாளர்களை மகிழ்ச்சியாகத்தான் வைத்திருக்கிறது அந்தவகையில் இப்போது கூகுள் பஸ்-ல் இரண்டு மாற்றம் வரப்போகிறது.
முதாலாவது வரும் மாற்றம் கூகுள் பஸ்-ல் உங்களுக்கு பிடித்தவர்களிடம் இருந்து வரும் செய்தியை உங்கள் இமெயிலுக்கு வரும்படி செய்யும் இன்பாக்ஸ் மனேஸ்மெண்ட் அடுத்து உங்களுக்கு சில நபர்கள் அனுப்பும் பஸ் செய்தி பிடிக்காமல் இருக்கலாம் அப்படி இருக்கும் செய்தியை மீயூட் செய்து உங்களுக்கும் அவர் அனுப்பும் செய்தி இனி வராமல் செய்யலாம். விரைவில் இந்த இரண்டு மாற்றங்களும் கூகுள் பஸ்-ல் வர இருக்கிறது.