ஜக்குபாய்
Posted by
சுஜந்தன் at
|
Share this post:
|
0 Comments
நடிப்பு: சரத்குமார், ஸ்ரேயா, கவுண்டமணி
இசை: ரஃபி
ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்
இயக்கம்: கேஎஸ் ரவிக்குமார்
தயாரிப்பு: ராடான் – ஜீ
சென்னையை கிரிமினல் இல்லாத சிட்டியாக மாற்ற போராடும் போலீஸ் அதிகாரி தான் படத்தின் நாயகன் சரத்குமார்.இப்போது படத்தின் பாதிகதை புரிந்திருக்கும். ஒரு வழக்கு விஷயமாக ஆஸ்திரேலியா செல்லும் சரத்குமார் அங்கு ஒரு பெண்ணை காதலித்துவிட்டு இந்தியா வருகிறார் இவர்களின் காதலுக்கு பரிசாக ஸ்ரேயா பிறக்கிறார். அழகான ஸ்ரேயாவின் அம்மா கார் விபத்தில் இறக்க நாயகியை வில்லன் துரத்த சரத்குமார் தன் மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் மொத்த கதை.
சரத்குமாரின் போலிஸ் வேடம் படத்திற்கு கன கச்சிதமாக பொருந்துகிறது ஆனால் இன்னும் எத்த்னை வருடம் தான் சென்னையை கிரிமினல் சிட்டியாக காட்டுவார்களோ. அடுத்து படத்தின் அடுத்த கதாபாத்திரம் என்றும் சொல்லும் அளவுக்கு காமெடியில் மட்டுமல்ல நடிப்பிலும் தனி முத்திரைபதித்துள்ளார். மகள் ஸ்ரேயாவை காப்பாற்ற ஆஸ்திரேலியா செல்லும் சரத்குமாருக்கு ஆஸ்திரேலியா எம்ஐபி போலிஸ் கவுண்டமணி பக்கபலமாக உள்ளார்.
வழக்கமாக சரத்குமாருக்கு மணிவண்ணன் கூட்டனி தான் சரியாக வரும் என்று வெற்றி இயக்குனருக்கு தெரியாமல் போய்விட்டதா என்று தெரியவில்லை. படத்தின் நாயகி ஸ்ரேயா-வின் வழக்கமான பாணியில் தான் நடிப்பு தெரிகிறது, ஒருவேளை தொடர்ச்சியாக ஒரே மாதிரி ரோல் தான் ஸ்ரேயாவுக்கு கிடைக்கிறதோ என்னவோ. ஆஸ்திரேலியா சென்று மகளை காப்பாற்றும் காட்சிகளில் வேகம் இருக்கிறது.
படத்தில் சரத்குமார் ஜோடியாக வரும் ஸ்ரிஷா-க்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் தன் பங்கை சரியாக நடித்துள்ளார்.படத்தின் இயக்குநர் கேஎஸ்ஆர் கமர்சியல்- படத்தில எல்லாம் நீங்க ஹிட் கொடுப்பிங்கன்னு தெரியும் ஆனா ஒரே மாதிரி செண்டிமண்ட்,அழுகை காட்சிகளை மக்கள் இப்போதெல்லாம் விரும்புவதில்லை. ஆஸ்திரேலியாவில் பாடல் மற்றும் சண்டை காட்சிகளையும் அழகாக படம் பிடித்து நம் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜசேகர்.
கேஎஸ்ஆர் படத்தில் இசைக்கு எப்போதுமே கொஞ்சம் முக்கியத்துவம் இருக்கும் ஆனால் இந்த படத்தில் இசை பரவாயில்லை என்று தான் சொல்லவேண்டும். முதல் பாதியில் காட்சிகளின் வேகம் கொஞ்சம் குறைவாக சென்றாலும் அடுத்த பாதியில் வேகம் பரவாயில்லை. கவுண்டமணியின் காமெடி இனி பல படங்களில் வெடிக்கும் என்பது படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும். மொத்தத்தில் ஜக்குபாய் சுமாரான பாய் தான்.

About
Contact



