|
Share this post:
|

நடிப்பு : அம்ஷத் , யாமினி ,
இசை : கங்கை அமரன்
ஒளிப்பதிவு : விஜய் ஆம்ஸ்டராங்.
இயக்கம் : ராஜேஷ் லிங்கம்
கல்லூரியில் நடக்கும் காதலை நண்பர்களின் படை சூழ அழகான புகைப்படமாக எடுத்திருக்கும் படம் தான் இந்த புகைப்படம்.கொடைக்கானல் பொறியியல் கல்லூரியில் ஏழு நண்பர்களின் சுட்டித்தனத்தையும் ஒரு காதலையும் ஏதார்த்தமாக சொல்ல முன் வந்திருக்கிறார் இயக்குநர். கல்லூரிக்கு படிக்க வரும் காலம் எல்லாம் இப்போது இல்லை ஜாலியாக நண்பர்களுடன் அரட்டை அடித்து பொழுது போக்குவதை சரியாக எடுத்துள்ளனர்.
கல்லூரியில் அழகான பெண் இல்லை என்பதற்காக வேறு பிரிவுக்கு செல்வதில் இருந்து ஆரம்பமாகிறது படத்தின் கதை. ஒவ்வொருவரும் தனித்தனி விதமாக இருந்தாலும் ஏழு பேரும் நண்பர்களாகின்றனர்.படத்தின் நாயகன் அம்ஷத்-க்கும் பிரியாவிற்கும் நடக்கிற காதல் ஏற்கனவே உள்ள மாதிரி என்றாலும் கொஞ்சம் திரைக்கதையில் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது.படத்தின் இடையிடையே கல்லூரி கலாட்டா என்று கதையை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.
கல்லூரி விடுமுறைக்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒவ்வொரு ஊராக செல்வது தமிழ் சினிமாவுக்கு பதிதல்ல. அதே போல் நாயகியின் அப்பா காதலை எதிர்ப்பதும் புதிதுஅல்ல. படத்தின் காட்சிகளில் வேகம் தெரிகிறது ஆனால் கதையில் வேகம் கொஞ்சம் குறைவாகத்தான்உள்ளது. படத்தில் புதுமுகங்களை வைத்து கல்லூரியின் காட்சிகளை ரசிக்கும்படி எடுத்திருக்கிறார் இயக்குனர்.
அம்ஷத்தும் நாயகியும் இறுதியில் இணைந்தார்களா நண்பர்கள் எடுத்த முடிவு என்ன என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். கரகாட்டக்காரன் புகழ் சண்முகசுந்தரம் ஹச்ஒடி யாக வந்து ஆங்கிலம் பேசி டிப்டாப் ஆக வருவது காட்சியில் அருமை. அடுத்து கல்லூரி சேர்மனாக பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பொருத்தமாக இருக்கிறார். ஒளிப்பதிவில்கொடைக்கானலை விஜய் ஆம்ஸ்டராங் மிக நேர்த்தியாக படம் பிடித்து காட்டியுள்ளார்.
கங்கை அமரனின் பாடல்கள் அனைத்தும் நாம் ஏற்கனேவே கேட்ட பழைய இளையராஜாவின் அதே மெட்டுக்களை நினைவுபடுத்துகிற்து. ஆசை, கோபம் , பாசம் , காதல் ,செண்டிமண்ட் என்று இயக்குனர் தன் பங்கை படத்தில் சரியாக எடுத்துக்காட்டியுள்ளார். மொத்தத்தில் புகைப்படம் நம் பழைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தும் ஒரு வீடியோ.




About
Contact