|
Share this post:
|

விஜய்-ன் வேட்டைக்காரன் திரைப்படம் பற்றிய பார்வை சன் பிக்சர்சின் எந்த படம் எடுத்தாலும் அதை விளம்பரத்தால் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆக்கும் மீடியாக்கள் அவர்கள் பக்கம் இருப்பது பலம் தான் இருந்தும் வேட்டைக்காரன் ஏன் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை என்பதை பற்றி தான் இந்த பதிவு.
மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவான்கள் எல்லாம் ஒவ்வொரு முறையும் தாங்கள் தேர்வு செய்யும் கதையும் கதாபாத்திரமும் வித்தியாசமாகவே இருக்க விரும்புகின்றனர் ஒரே மாதிரி கதையில் நடிகர்கள் நடிப்பதை மக்கள் இப்போது விரும்புவது இல்லை காரணம் அதிக திரைப்படங்களின் வருகை சில வருடங்களுக்கு முன்னால் பொங்கல், தீபாவளிக்கு ஏதாவது ஒன்று இரண்டு திரைப்படங்கள் தான் வெளிவரும் அதுவும் மிகப்பெரிய திரை நட்சத்திரம் நடித்த படமாக தான் இருக்கும் வேறு படம் வெளிவராத காரணத்தினாலும் மக்கள் அந்த படங்களை பார்த்து தான் ஆக வேண்டும். ஆனால் இன்று அப்படிஅல்ல மாதம் குறைந்த்து ஒன்று இரண்டு படங்களாவது வெளிவருகிறது அதிலும் தினமும் ஒரு புதுமுகம் அறிமுகமாகின்றனர்.
இந்த நிலையில் வேட்டைக்காரன் விஜய் படம் ஒரே மாதிரி கதையாகத்தான் இருக்கிறது. கில்லி படம் பார்த்த போது இருந்த அதே வேகம் விஜய்யிடம் இன்றும் இருக்கிறது. தேர்வு செய்யும் கதையில் தான் பிரச்சினை. கடந்த வருடத்தில் வெளிவந்த விஜய்-ன் அழகியதமிழ்மகன், வில்லு போன்ற திரைப்படங்களில் எல்லாம் ஒரே மாதிரி திரைக்கதையுடன் தான் வெளிவருகிறது. போலீஸ் அதிகாரி , ரவுடி , இரண்டு ரோல்கள் தான் என்றாலும் அதிலும் செய்ய எவ்வளவு இருக்கிறது ஆங்கில் திரைப்படங்களை எல்லாம் நாம் பார்க்கவில்லையா எத்தனை ஹாலிவுட் நடிகர்கள் போலிஸ் வேடத்தில் நடித்தாலும் படத்திற்கு படம் எத்தனை மாறுதல்களை செய்கின்றனர் என்பதை விஜய்-ஐ வைத்தும் இயக்கும் இயக்குநர்கள் பார்க்க வேண்டும்.
கமல் நடித்து வெளிவந்த “ உன்னைப்போல் ஒருவன் “ வித்தியாசமான திரைக்கதையால் தான் வெற்றி பெற்றது. அதே போல் நாடோடிகள் திரைப்படமும் நண்பர்களின் கதை தான் என்றாலும் திரைக்கதையால் தான் வெற்றி பெற்றது எவ்வளவு பெரிய விளம்பரத்தாலும் ஒரு படத்தை அதிக நாள் திரையிடமுடியாது என்பதை எல்லாம் பெரிய நட்சத்திரங்களை வைத்து இயக்கும் இயக்குநர்கள் முடிவு செய்து இனிவரும் திரைப்படங்களில் திரைக்கதையில் மாற்றம் செய்தால் எந்த விளம்பரமும் இல்லாமலே படம் வெற்றி பெரும்

About
Contact