|
Share this post:
|

நடிப்பு : புதுமுகம் செல்வின் , நிக்கோல் ,ஜெயக்குமார் ,மணிவண்ணன்.
இசை : விஜய்சாரதி
இயக்கம் : சதாஜி
நல்ல நண்பர்கள் நட்பில் சந்தேகம் வரக்கூடாது அப்படி சந்தேகம் வந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது தான் நாய்க்குட்டி படத்தின் கதை. சேரியில் மொத்த படமும் நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறார் இயக்குநர். பணத்துக்காக விபச்சார கும்பலிடம் வேலைக்கு சேர்கிறார் படத்தின் நாயகன் செல்வின். இந்த கும்பல் செல்வின் நண்பனின்(சூரி) மனைவியை கடத்திவருகிறது அப்போது தான் அறிவு தெளிந்து நண்பனின் மனைவியை காப்பாற்றி அந்த கும்பலிடம் இருந்து விலகுகிறார்.பொறுப்பில்லாத மகனை பெற்று விட்டோமே என்ற விரக்தியில் உயிரை விடுகிறார் மணிமண்ணன்.
சூரியின் மனதை மாற்றி செல்வினுக்கு எதிராக திருப்பி விடுகிறது விபச்சார கும்பல். சூரியை வைத்தே நிக்கோலை கடத்துவது என்று அதிரடியாக நகர்கிறது திரைக்கதை.குடிகாரன் கெட்டப்பில் செல்வின் செய்யும் ரகளை , நண்பனின் மனைவியை விபச்சார இடத்தில் கண்டபோது சென்டிமென்ட் என நடிப்பில் செல்வின் சூப்பர். நிக்கோல் தன் பங்கை சரியாக செய்துள்ளார். சேரி மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படம்பிடித்து காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர்.
அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரியான முக்கியத்துவம் , யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் படத்தின் கிளைமாக்ஸ்சை கொடுத்துள்ளார் இயக்குநர்.மொத்தத்தில் தயாரிப்பாளருக்கு செலவில்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த நாய்குட்டி இயக்குநருக்கு அடுத்த படத்தை வாங்கி கொடுக்கும் ஒரு செல்லகுட்டி.



About
Contact