We have new forums at NiteshKothari.com
TopBottom

Announcement: wanna exchange links? contact me at clwolvi@gmail.com.

நாணயமாற்று விகிதங்கள்

Posted by சுஜந்தன் at
Share this post:
Ma.gnolia DiggIt! Del.icio.us Yahoo Furl Technorati Reddit

ஆயிரத்தில் ஒருவன் திரை விமர்சனம்


ஆயிரத்தில் ஒருவன் திரை விமர்சனம்

பல எதிர்பார்ப்புகளுடன் சில வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் செல்வராகவனின் ” ஆயிரத்தில் ஒருவன் “ – திரை விமர்சனம்.

நடிப்பு: கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன்
இசை: ஜிவி.பிரகாஷ்.
ஒளிப்பதிவு:ராம்ஜி

சோழர்கள் பாண்டியரின் சிலையையும் பொக்கிஷத்தையும் திருடிச்செல்கின்றனர். இதை மீட்க அரசு நிர்ணயிக்கும் குழுவில் ரீமா , ஆண்ட்ரியா , அழகம் பெருமாள். இவர்களுக்கு உதவி செய்ய படத்தின் நாயகன் கார்த்தி. இந்த குழு பாண்டியரின் சிலையையும் பொக்கிஷத்தை மீட்க படும் போராட்டமே திரைக்கதை. அரசர்காலம், தீவு, ஆபத்து, காட்டுவாசி , வாள், பாம்பு , பாதளம், என்ற ஒரு புதிய வழியில் பயணித்திருக்கிறார் செல்வா, கார்த்தி நடிப்பு படத்திற்கு உண்மையான பலம். சோழர்காலம் பாண்டிய மன்னரின் காலம் நம் எதிர்பார்ப்பிற்கு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரி படத்திற்கு செட் எவ்வளவு முக்கியம் என்று கண்டிப்பாக இயக்குனர்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

முதல் பாதி வரை படம் விறுவிறுப்பாக தான் செல்கிறது. ஒளிப்பதிவு இன்னும் அந்த காலத்திற்கு நம்மை கூட்டி செல்லவில்லை. ஒருவேளை நாம் பார்த்த அவதார் திரைப்படத்தினால் நம் கண்கள் எதிர்பார்ப்பு சில காட்சிகளில் மட்டும் மகிழ்விக்கிறது. சோழ மன்னனாக பார்திபன் கச்சிதம். பார்திபபின் காட்சிகளில் கொஞ்சம் வேகம் கூட்டிஇருக்கலாம். இராணுவ அதிகாரி அழகம் பெருமாள் நிஜ அதிகாரி போலவே நடித்துள்ளார். ரீமா , ஆண்ட்ரியா படத்தில் சரியாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இரண்டாம் பாதி

பாதாளத்தில்; வேகம் இல்லை.

இசையில் “உன்மேலே ஆசைதான்” பாடல் தவிர மற்றவை சொல்லும்படி இல்லை. கிராபிக்ஸ் இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சொல்ல வேண்டியதை ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை மாறாமல் திரைக்கதையுடன் பயணம் செய்கிறார் செல்வா.

மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் நூற்றில் ஒருவன் தான்


aairathiloruvan_still2


aairathiloruvan_still1

0 comments:

Post a Comment

தேடல்

.