கூகுள் குரோம் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் முதல் பிரத்யேக சென்ஸிட்டிவ் வீடியோ காட்சி
Posted by
சுஜந்தன் at
|
Share this post:
|
0 Comments
குரோம் ஆப்ரேட்டிங் சிஸ்டம் இந்த ஆண்டு முதல் டேப்ளட் பிசியை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்தது இருந்தது பல வசதிகள் இந்த டேப்ளட் -ல் இருக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் ஆப்பிள் ஐபேட் வெளிவந்து கொஞ்சம் பயத்தை கூகுளுக்கு காட்டிவிட்டது இருந்தாலும் ஆப்பிள் ஐபேடில் ப்ளாஸ் கோப்புகள் தெரியவில்லை என்பது ஒரு பெரிய குறை தான். மற்றபடி ஒரு டேப்ளட் பிசியில் இருக்க வேண்டிய அனைத்தையுமே இந்த ஐபேடில் கொண்டு வந்து பெரிய வெற்றி தான்.
கூகுள் இப்போதே விளம்பரத்தை தொடங்கினால் தான் நாமும் மார்க்கெட்டில் நிற்க முடியும் என்று நினைத்து ஐபேடுக்கு போட்டியாக கூகுள் குரோம் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் டேபிளட் பிசியைப் பற்றிய சென்ஸ்ட்ட்டிவ் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளனர். நம் கண்களால் நம்பமுடியாத அளவுக்கு இரண்டு கைகளையும் வைத்து டேப்ளட் பிசியில் அவர்கள் செய்யும் சென்ஸ்ட்சிவ் டச் நமக்கு கொஞ்சம் பிரமிப்பாக தான் உள்ளது.
இது தான் முதல் வீடியோ 42 நொடிகள் ஒடக்கூடியவகையில் உள்ளது. கீபோர்ட்டில் டைப் செய்வது இவ்வளவு எளிதாக இருக்குமா என்று வியக்க வைக்கிறது,விரல்களால் மேலேயும் கீழேயும் ஸ்குரோல் செய்வது என அத்தனையுமே புதுமையாகத்தான் உள்ளது.கூகுள் என்றாலே தெரியும் எளிமை இந்த கூகுள் குரோம் டேப்ளட்டிலும் எதிர்பார்க்கலாம். இதன் சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளேன்

About
Contact
