|
Share this post:
|
அஸ்கிரிய மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.முன்னாள் அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க, இன்று காலை மகாநாயக்கரை சந்தித்த போதே நாட்டுக்கு சேவை செய்வதற்காக உச்சக்கட்ட ஆதரவை மக்கள் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார்.பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட நாட்டில், வாய்க்கால்களை புனரமைத்து, விவசாயத்தை மேம்படுத்த ஜனாதிபதி தமது அவதானத்தை செலுத்தவேண்டும் என மகாநாயக்கர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.வறிய மக்கள் மற்றும் தொழிலற்ற இளைய சமுதாயத்தினர் தொடர்பில் ஜனாதிபதி, உரிய கவனம் செலுத்தவேண்டும் என மகாநாயக்கர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.வடக்குகிழக்கு பகுதியில் உள்ள மக்களின் வாக்குகள் குறைந்தநிலையில் கிடைத்த போதும், அந்த மக்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்றும் மகாநாயக்கர் கோரியுள்ளார்.இதேவேளை, நடந்தவற்றை மறந்து, சமாதானத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என மல்வத்த மகாநாயகர் திப்பட்வே ஸ்ரீ சித்தார்த சுமங்கல தேரர், எஸ் பி திஸாநாயக்கவிடம் கோரியுள்ளார்வடக்கு கிழக்கில் குறைந்த வாக்குகள் பெறப்பட்டிருப்பினும் அந்த மக்களுக்கு பாரபட்டசம் காட்ட வேண்டாம். அஸ்கிரிய மகாநாயக்கர் ஜனாதிபதியிடம் கோரிக்கை.


About
Contact