|
Share this post:
|
கூகிள் இணையத்தளத்தில் ஊடுருவி தகவல்களைத் திருடுவதில் சீன அரசு கடுமையான போக்கை கடைப்பிடித்து வருவதாக கூகிள் குற்றம் சாட்டியுள்ளது. சீனமொழியில் இயங்கிவரும் கூகிள் தேடுபொறி இணையதளத்தில் முக்கியமானவர்களின் ஈ மெயில் போன்றவற்றிலுள்ள தகவல்களை அரசு திருடுவதாக கூகிள் அண்மையில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீன அரசு கொடுத்து வரும் அளவுக்கதிகமான அழுத்ததினால் சீனாவை விட்டே வெளியேறுவதற்குக் கூகிள் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூகிளின் ப்ரவேசியை பாதிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் சீனாவின் இந்த செயற்பாடுகளால் சீன மொழியிலான இந்த இணையத்தள சேவையை நிறுத்தப்போவதாகவும் அலுவலகத்தை மூடப்போவதாகவும் கூகிள் மிரட்டியுள்ளது. ஆயினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து சீன அரசு அறிக்கை வெளியிட்டிருப்பதுடன் இணையப்பாதுகாப்பு தொடர்பான சீனாவின் கொள்கை வெளிப்படையானது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கூகுள் தகவலை திருடும் சீன அரசு


About
Contact