அப்டேட் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 பீட்டா இலவசம்

ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் மட்டும் அல்ல ஆபிஸ் மென்பொருளிலும்ராஜா மைக்ரோசாப்ட் தான். மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுக்குஎப்போதுமே மக்களிடத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான்இருக்கிறது அந்த வகையில் இப்போது ஆபிஸ் 2010 மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆபிஸ் 2010 பீட்டா வெளியானாலும் பலகுறைகளை மக்கள் கூறிவந்தனர். அத்தனை குறைகளையும் களைந்து
இப்போது அப்டேட் செய்யப்பட்ட முழுமையான ஒரு ஆபிஸ் 2010 பீட்டாபதிப்பு வெளியாகி உள்ளது.
மைக்ரோசாப்ட் ஆபிஸ்-ன் ஒவ்வொரு பதிப்பிற்கும் ஒவ்வொருசிறப்பு உண்டு அந்த வகையில் இப்போது கிளவுட் கம்யூட்டிங் என்று
சொல்லக்கூடிய ஆன்லைன் -ல் உங்கள் வேலைகளை அனைத்தையும்செய்யும் வசதிகளுடன் ஆபிஸ் 2010 வெளிவரப்போகிறது. கூகுள்டாக்ஸ் மற்றும் சோகோ (Zoho) போன்ற ஆன்லைன்-லே ஆபிஸைபயன்படுத்தும் வசதி இருந்தாலும் நாம் விரும்புவது எப்போதும் ஆப்லைன்தான், ஆன்லைன் -ல் எப்போதுமே நம் டேட்டாவிற்கு பாதுகாப்பு இல்லைஎன்னதான் நீங்கள் செக்யூரிட்டிக்காக பல நெருப்பு சுவர்களை வைத்திருந்தாலும்திருடர்களுக்கு எல்லாமே எளிது தான் இதனாலேயே பல பேர் மைக்ரோசாப்ட்ஆபிஸ் பக்கம் வந்து விடுகின்றனர்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 அப்டேட் மென்பொருளை கீழ்கண்ட மைக்ரோசாப்ட் இணையதள முகவரியில் இருந்து
இலவசமாக தரவிரக்கிகொள்ளவும்.
http://www.microsoft.com/office/2010/download-office-professional-plus/default.aspx