We have new forums at NiteshKothari.com
TopBottom

Announcement: wanna exchange links? contact me at clwolvi@gmail.com.

நாணயமாற்று விகிதங்கள்

Posted by சுஜந்தன் at
Share this post:
Ma.gnolia DiggIt! Del.icio.us Yahoo Furl Technorati Reddit


எதிர்கட்சி வேட்பாளரை விட அதிக மேலதிக வாக்குகளை பெற்று ஜனாதிபதி சாதனை


எதிர்கட்சி வேட்பாளரை விட அதிக மேலதிக வாக்குகளை பெற்று ஜனாதிபதி சாதனை.


எதிர்கட்சி வேட்பாளரை விட 18 லட்சத்து 42 ஆயிரத்து 749 வாக்குகளை மேலதிகமாக ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ, இந்த முறை இடம்பெற்ற தேர்தலில் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இலங்கையின் ஆறாவது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 60 லட்சத்து 15 ஆயிரத்து 943 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
எதிர்கட்சியின் பிரதான வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா இதன்போது, 41 லட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளையே பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மொத்த வாக்குகளின் சராசரி 57.88 சதவீதமாக இருந்த அதேவேளை, எதிர்கட்சிகளின் பிரதான வேட்பாளரது மொத்தவாக்குகளின் சராசரி 40 சதம் 15 ஆகும்.
இந்தமுறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒருகோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 வாக்காளர்கள் தகுதிபெற்றிருந்தனர்.
எனினும், அவர்களில் ஒரு கோடியே 3 லட்சத்து 93 ஆயிரத்து 613 வாக்காளர்கள் மாத்திரமே வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
இதனிடையே இந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார்.
கொழும்பு, ரத்திரனபுரி, காலி, புத்தளம், பதுளை, மாத்தறை, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை, களுத்துறை, மாத்தளை, குருணாகல், கண்டி, மொனராகலை, கம்பஹா, கேகாலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஜனாதிபதி வெற்றிபெற்றுள்ளார்.
அதேசமயம், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ஆறு மாவட்டங்களில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளார்.
நுவரெலியா, திஹாமடுல்ல, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே ஜெனரல் சரத்பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார்.
இதேவேளை, 2005 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலா 11 மாவட்டங்களை வெற்றிகொண்டிருந்தனர்.
2005 ம் ஆண்டு எதிர்கட்சித் தலைவர் வென்;றிருந்த கொழும்பு, கண்டி, மாத்தளை, புத்தளம், பதுளை ஆகிய மாவட்டங்களை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த முறை தம்வசப்படுத்தியுள்ளார்.
இதனிடையே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1999 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிரணி வேட்பாளரை விட 7 லட்சத்து 9 ஆயிரத்து 408 வாக்குகளையே மேலதிகமாக பெற்றார்.
அதேபோன்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலி;ல் எதிர்கட்சி வேட்பாளரை விட 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகளையே பெற்றிருந்தார்.
எனினும், இந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அந்த இடைவெளி பெரிய அளவை கொண்டுள்ளது.
இந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விட 18 லட்சத்து 42 ஆயிரத்து 742 வாக்குகள் என்ற பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

தேடல்

.