கோவா
Posted by
சுஜந்தன் at
|
Share this post:
|
0 Comments
நடிப்பு : ஜெய், வைபவ், பிரேம்ஜி , சினேகா ,பியா ,
இசை : யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு : சக்தி சரவணன்
இயக்கம் : வெங்கட் பிரபு
இயக்கம் : வெங்கட் பிரபு
தயாரிப்பு : சவுந்தர்யா ரஜினிகாந்த்
கிராமத்தில் வாழும் மூன்று இளைஞர்கள் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் சொகுசாக வாழ ஆசைப்படுகின்றனர் இதற்காக இவர்கள் செய்யும் ஜாலி தான் கோவா திரைப்படத்தின் கதை. வெங்கட் பிரபுவின் படம் என்றால் நாம் எதிபார்த்து செல்வது நகைச்சுவை கலந்த கலாட்டா , எதிர்பார்த்ததை சரியாக செய்துள்ளார் வெங்கட்பிரபு. பணி ஒய்வில் இருக்கும் இராணுவஅதிகாரி சந்திரசேகரின் மகன் ஜெய் , ஊர் பெரியவர் விஜயகுமாரின் மகன் வைபவ். கிராமத்து தெய்வகுழந்தையாக பிரேம்ஜி வருகிறார்.
மூவரும் நண்பர்கள் கிராமத்தில் எதை செய்தாலும் கட்டுப்பாடு விதித்து சுதந்திரம் இல்லாமல் இருப்பதாக மூவரும் எண்ணுகின்றனர். ஒரு சிறிய வட்டத்திற்குள் உள்ளது போலவே நினைக்கின்றனர். ஒரு வாரம் எங்கேயாவது சென்று ஜாலியாக இருக்க வேண்டும் என்று எண்ணி மதுரையில் இருக்கும் தன் நண்பர் வீட்டுக்கு வருகின்றனர். அங்கு நண்பன் வெளிநாட்டு பெண்னை திருமணம் செய்கிறார் இனி தாம் வெளிநாட்டில் வாழப்போவதாக சொல்கிறார்.
இதைக் கேட்ட மூவரும் தாமும் இப்படி ஒரு வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்தால் நாமும் வெளிநாட்டிற்கு செல்லலாம் என்று எண்ணுகின்றனர். வெளிநாட்டு பெண்ணை எங்கு சென்று தேடுவது என்ற போது அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் தான் கோவா இனி இதைச்சுற்றி தான் படம் செல்கிறது. படத்தின் முதல் பாதியில் வேகம் சரியாக இருக்கிறது. இரண்டாவது பாதியில் வேகம் எதிர்பார்ப்பை விட குறைவாக தான் உள்ளது. படத்தில் வரும் பணக்கார பெண்ணாக சினேகா வைபவ்-ஐ ஒரு வழிபடுத்துகிறார். சினேகா உடைகளில் பழைய படங்களில் இல்லாதவாறு கொஞ்சம் சலுகை காட்டியுள்ளார்.சம்பத்-ன் கேரக்டர் படத்தில் அழுத்தமாக பதிந்துள்ளது. ஜெய் ஆங்கிலம் பேச ஆரம்பித்தவுடன் சிரிப்பு நம்மை அறியாமல் வருகிறது.
பிரேம்ஜி அடிக்கும் காமெடி படத்திற்கு பிளஸ் தான்.சவுந்தர்யா ரஜினி தயாரிப்பில் வெளிவரும் முதல் படம்.படத்தின் காட்சிகளை கிராமத்திலிருந்து கோவா வரை நேர்த்தியாக படம் பிடித்துகாட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன். இசையில் இளையஞானி யுவன் பாடலில் முதல் முத்து ”பண்ணையபுரம் பாடல்” கண்டிப்பாக சிறந்த பாடலுக்கான விருது கிடைக்கும். மொத்தத்தில் கோவா ஒரு பால் கோவா
படத்தின் சவாரஸ்யங்களில் பல....
படத்தின் கதை பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை என்பது படம் முழுக்க தெரிகின்றது...
படம் முழுவதும் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதால் அவர்கள் சிரியஸ் விஷயங்களை அதிகம் போட்டு குழப்பிக்கொள்ளவில்லை...
படத்தில் வேலை செய்த அனைவரும் ரொம்பவும் ஜாலியாக அரட்டை அடித்து படம் எடுத்த விளைவை... அந்த அரட்டையை படம் பார்க்கும் போது பார்வையாளன் அந்த ஜாலியை பல இடங்களில் உள்வாங்க முடிந்தது...
ஹோமே செக்ஸ் பற்றி மிகவும் தைரியமாக எடுத்து இருக்கின்றார்கள்.... அவர்களது காதலை ரொம்ப காமெடியாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர்... (அப்பாடி விமர்சன தலைப்புக்கான விஷயத்தை சொல்லியாகிவிட்டது...)

About
Contact




