We have new forums at NiteshKothari.com
TopBottom

Announcement: wanna exchange links? contact me at clwolvi@gmail.com.

நாணயமாற்று விகிதங்கள்

Posted by சுஜந்தன் at
Share this post:
Ma.gnolia DiggIt! Del.icio.us Yahoo Furl Technorati Reddit






தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சி பொதுவேட்பாளர் ஜெனரல்சரத்பொன்சேகா தெரிவிப்பு

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் கருத்திற்கு தாம் மதிப்பளிப்பதாகவும், அதை ஏற்பதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த தேர்தல் முடிவுகள் மக்களின் பிரதிபளிப்பை வெளிக்காட்டுவதாக இல்லை என தெரிவித்தார்.
தாம் மக்களை சந்தித்தபோது மக்களின் எண்ணங்களை அறிந்துகொண்டதாகவும் அது உரிய முறையில் தேர்தலில் வெளிப்படுத்த முடியாது போனதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த 16 மாவட்டங்களில் வெற்றி, பொன்சேகாவுக்கு 6 இல் வெற்றி


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த 16 மாவட்டங்களில் வெற்றி, பொன்சேகாவுக்கு 6 இல் வெற்றி


ஆறாவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்யும் முகமாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 16 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
கொழும்பு, ரத்திரனபுரி, காலி, புத்தளம், பதுளை, மாத்தறை, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை, களுததுறை, மாத்தளை, குருணாகல் கண்டி, மொனராகலை, கம்பஹா, கேகாலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஜனாதிபதி வெற்றிபெற்றுள்ளார்.
இதனிடையே, எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ஆறு மாவட்டங்களில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளார்.
நுவரெலியா, திஹாமடுல்ல, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே அவர் வெற்றிபெற்றுள்ளார்.
இதேவேளை, 2005 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலா 11 மாவட்டங்களை வெற்றிகொண்டிருந்தனர்.
2005 ம் ஆண்டு எதிர்கட்சித் தலைவர் வென்;றிருந்த கொழும்பு, கண்டி, மாத்தளை, புத்தளம், பதுளை ஆகிய மாவட்டங்களை ஜனாதிபதி இந்த முறை தம்வசப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, மொத்த அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகளின் படியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றிபெற்றுள்ளார்.
இதன்போது, அவர் 2 லட்சத்து 57 ஆயிரத்து 544 வாக்குகளை பெற்றுக்கொண்ட அதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகா 1 லட்சத்து 29 ஆயிரத்து 210 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.
இதனடிப்படையில் ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ அஞ்சல் மூல வாக்களிப்பில் மேலதிக 28 ஆயிரத்து 334 வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் அவர் 6 லட்சத்து 14 ஆயிரத்து 740 வாக்குகளை பெற்றுக்கொண்ட அதேசமயம், ஜெனரல் சரத்பொன்சேகா 5 லட்சத்து 33 ஆயிரத்து 22 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
களுத்துறை மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 5 லட்சத்து 12 ஆயிரத்து 562 வாக்குகளை பெற்றுக்கொண்ட அதேவேளை, ஜெனரல் சரத்பொன்சேகா 2 லட்சத்து 31 ஆயிரத்து 807 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
கம்பஹா மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 7 லட்சத்து 18 ஆயிரத்து 716 வாக்குகளை பெற்றுக்கொண்ட அதேவேளை, ஜெனரல் சரத்பொன்சேகா 6 லட்சத்து 34 ஆயிரத்து 506 வாக்குகளைப் பெற்றார்.
குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 5 லட்சத்து 82 ஆயிரத்து 784 வாக்குகளை பெற்றுக்கொண்ட அதேசமயம் ஜெனரல் சரத்பொன்சேகா 3 லட்சத்து 27 ஆயிரத்து 594 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
புத்தளம் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 2 லட்சத்து ஆயிரத்து 981 வாக்குகளை பெற்றுக்கொண்ட அதேசமயம் ஜெனரல் சரத்பொன்சேகா புத்தளம் மாவட்டத்தில் மொத்தமாக பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 233.
அநுராதபுரம் மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2 லட்சத்து 98 ஆயிரத்து 448 வாக்குகளை பெற்றுக்கொண்டார்
அதேசமயம் ஜெனரல் சரத்பொன்சேகா அநுராதபுரம் மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 761.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலன்னறுவை மாவட்டத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 889 வாக்குகளையும், ஜெனரல் சரத் பொன்சேகா 75 ஆயிரத்து 26 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
இதனிடையே, வன்னிமாவட்டத்தை ஜெனரல் சரத்பொன்சேகா வெற்றிக்கொண்ட அதேசமயம், அவர் அங்கு பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணி;க்கை 70 ஆயிரத்து 369 ஆகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்னி மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 740 ஆகும்.
இந்தநிலையில், ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாண மாவட்டத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 877 வாக்குகளை பெற்றுக்கொண்ட, அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 44 ஆயிரத்து 154 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
திகாமடுத்த மாவட்டத்தை வெற்றிக்கொண்ட ஜெனரல் சரத் பொன்சேகா 1 லட்சத்து 53 ஆயிரத்து 155 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகாமடுல்ல மாவட்டத்தில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 912 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா மொத்தமாக 87 ஆயிரத்து 661 வாக்குகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 69 ஆயிரத்து 752 வாக்குகளையும் பெற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜெனரல் சரத்பொன்சேகா ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 57 வாக்குகளையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 55 ஆயிரத்து 663 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா 4 லட்சத்து 6 ஆயிரத்து 636 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 3 லட்சத்து 29 ஆயிரத்து 492 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
மாத்தளை மாத்தளை மாவட்டத்தை வெற்றி;க்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ 1 லட்சத்து 57 ஆயிரத்து 953 வாக்குகளை பெற்ற அதேசமயம், ஜெனரல் சரத்பொன்சேகா 1 லட்சத்து 513 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
நுவரெலியா மாவட்டத்தை வெற்றி;க்கொண்ட ஜெனரல் சரத்பொன்சேகா 1 லட்சத்து 80 ஆயிரத்து 604 வாக்குகளை பெற்றுக்கொண்ட அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ 1 லட்சத்து 51 ஆயிரத்து 604 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
ரத்தினபுரி மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 3 லட்சத்து 77 ஆயிரத்து 734 பெற்றுக்கொண்டதுடன், ஜெனரல் சரத்பொன்சேகா 3 லட்சத்து 566 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
அதேபோன்று கேகாலை மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2 லட்சத்து 96 ஆயிரத்து 639 வாக்குகளையும், சரத்பொன்சேகா 1 லடசத்து 74 ஆயிரத்து 877 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
பதுளை மாவட்டத்தை வெற்றிக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ அங்கு 2 லடசத்து 37 ஆயிரத்து 579 வாக்குகளை பெற்றதுடன், ஜெனரல் சரத் பொன்சேகா 1 லட்சத்து 98 ஆயிரத்து 835 வாக்குகளையும் பெற்றுக்கொண்டார்.
மொனராகலை மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1 லட்சத்து 58 ஆயிரத்து 435 வாக்குகளை பெற்றுக்கொண்டதுடன் ஜெனரல் பொன்சேகா 66 ஆயிரத்து 803 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
காலி மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 3 லட்சத்து 86 ஆயிரத்து 971 வாக்குகளையும், ஜெனரல் சரத்பொன்சேகா 2 லடசத்து 11 ஆயிரத்து 633 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
மாத்தறை மாவட்டத்தை வெற்றி;க்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு 2 லட்சத்து 96 ஆயிரத்து 155 வாக்குகளை பெற்றுக்கொண்ட அதேசமயம், ஜெனரல் சரத் பொன்சேகா 1 லட்சத்து 48 ஆயிரத்து 510 வாக்குகளையும் பெற்றுக்கொண்டார்.
இதனிடையே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 2 லடசத்து 26 ஆயிரத்து 887 வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற அதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜெனரல் சரத்பொன்சேகா 1 லட்சத்து 5 ஆயிரத்து 336 வாக்குகளையே பெற்றுக்கொண்டார்.


சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் படையினரால் சுற்றி வளைப்பு

சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் தெபான பன்னியப்பிட்டிய பகுதியை படையினர் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிகளே அதிக முக்கியத்துவம் வழங்கி வந்தன. அத்துடன் குறித்த ஊடகங்களே சுயாதீனமாக இயங்கிவருகின்றன.

இதன் காரணமாக அந்த ஊடகத்தின் செயற்பாடுகளை தடுக்கும் வகையில், படையினர் இந்த சுற்றிவளைப்பை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம் பாதுகாப்பு கருதி கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பான செய்தி நிகழ்வு ஒளிப்பரப்பப்படுவதை தடுக்கவே பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



0 comments:

Post a Comment

தேடல்

.